கர்நாடகாவில் பா.ஜ.க. இளைஞரணி தொண்டர் படுகொலை; எம்.பி. காரை முற்றுகையிட்டு போராட்டம்

கர்நாடகாவில் பா.ஜ.க. இளைஞரணி தொண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எம்.பி.யின் காரை குலுக்கி, போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் பா.ஜ.க. இளைஞரணி தொண்டர் படுகொலை; எம்.பி. காரை முற்றுகையிட்டு போராட்டம்
Published on

தட்சிண கன்னடா,

கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டத்தின் பெல்லாரே பகுதியில் வசித்து வந்த பா.ஜ.க. இளைஞரணியை சேர்ந்த தொண்டர் பிரவீன் நெட்டார். இவரை பெல்லாரே பகுதியில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் பைக் ஒன்றில் வந்து நேற்றிரவு படுகொலை செய்து விட்டு தப்பியோடியது.

அவர் இரவில் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனை கண்டித்து கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சில இடங்களில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன.

இதனையடுத்து, போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். இதில், பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. புட்டூர், கபடா மற்றும் சுல்லியா தாலுகாக்களில் இன்று முழு அடைப்புக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில், தட்சிண கன்னடா எம்.பி.யான நளீன் கட்டீல் என்பவரின் காரை அக்கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில், அவரது காரை சூழ்ந்து கொண்டு, அதனை சாய்க்க முற்பட்டனர். காரை குலுக்கியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com