கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு எந்நேரமும் கவிழலாம்; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேட்டி

கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு எந்நேரமும் கவிழலாம் என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேட்டியில் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு எந்நேரமும் கவிழலாம்; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் முன்னாள் முதல் மந்திரி மற்றும் எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்போது, முன்புபோன்று அரசில் குழப்பம் தொடருகிறது.

இந்த அரசு தனது பதவி காலம் முழுவதும் நிறைவு செய்யும் என்பது சந்தேகமே. பா.ஜ.க. அரசு எந்நேரமும் கவிழலாம் என்ற சந்தேகம் கொள்கிறேன். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக போராடுவதுடன், அறிக்கைகளையும் விடுகின்றனர் என கூறியுள்ளார்.

ஆளும் கட்சியில் சில விவகாரங்கள் உள்ளன என தெளிவாக தெரிகிறது. அதனாலேயே ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு செல்கின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com