பாஜக எம்பிக்கள் அனைவரும் இன்று மற்றும் நாளை மக்களவை, மாநிலங்களவைக்கு வர உத்தரவு

முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருப்பதால் இன்றும் நாளையும் பாஜக எம்.பிக்கள் அனைவரும் பாரளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.#parliamentsession
பாஜக எம்பிக்கள் அனைவரும் இன்று மற்றும் நாளை மக்களவை, மாநிலங்களவைக்கு வர உத்தரவு
Published on

புதுடெல்லி,

முஸ்லிம் கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.

இதைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதாவை தயாரித்தது. இந்த மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் கடந்த 28-ம் தேதி தாக்கல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களவை போல் அல்லாமல், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலம் அதிகம் இருப்பதால், இந்த மசோதா மீதான விவாதத்தில் அனல் பறக்கும் என தெரிகிறது.

இந்த சூழலில், பாரதீய ஜனதா எம்.பிக்கள் இன்று மற்றும் நாளை மக்களவை, மாநிலங்களவை அவை நடவடிக்கைகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #parliamentsession #tripletalaq

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com