ஜார்கண்ட்: பாஜக தலைவர் வீட்டில் இளம்பெண் சித்திரவதை! நாக்கை பயன்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்த கொடுமை

பாஜக தலைவர் சீமா பத்ரா தனது வீட்டில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜார்கண்ட்: பாஜக தலைவர் வீட்டில் இளம்பெண் சித்திரவதை! நாக்கை பயன்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்த கொடுமை
Published on

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் முக்கிய பொறுப்பின் தலைவராக சீமா பத்ரா என்ற பெண் உள்ளார். இந்ந்நிலையில், அவர் ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தனது வீட்டில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவரை பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா மற்றும் சீமா பத்ரா தம்பதியினர் வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளனர்.

பின்னர், டெல்லியில் வசிக்கும் அவர்களது மகள் வத்சலா பத்ராவின் வீட்டில் வேலை செய்ய சுனிதா அனுப்பி வைக்கப்பட்டார். வத்சலா டெல்லியில் இருந்து மாற்றப்பட்டதும், சுனிதா மீண்டும் ராஞ்சிக்கு வந்து, சீமாவின் வீட்டில் பணிபுரிந்தார்.

இந்நிலையில், சுனிதாவை சீமா துன்புறுத்தத் தொடங்கி உள்ளார். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல், தனது சொந்த கிராமத்திற்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால், சீமா சுனிதாவை அடித்து ஒரு அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதை பற்றி ஜார்க்கண்ட் அரசின் பணியாளர் துறை அதிகாரி ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே போலீசார் சீமாவின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுனிதாவை ஆகஸ்ட் 22 அன்று மீட்டனர். பாஜக தலைவரின் அசோக் நகர் இல்லத்தில் இருந்து ராஞ்சி போலீசார் அவரை மீட்டனர்.

சீமாவின் வீட்டில் தான் அனுபவித்த கொடுமைகளை சுனிதா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அங்கு தனது பற்களை இரும்பு கம்பியால் உடைத்ததாகவும், சூடான பாத்திரங்களால் உடம்பில் எரித்ததாகவும், சிறுநீரை நக்க வைத்தனர், தன் நாக்கைப் பயன்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினார்.

எனக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். ஆனால், பத்ரா தம்பதியின் மகன் ஆயுஷ்மான் என்பவர் என்னை தன் தாயிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்வார். அவரால் தான் நான் உயிருடன் இருக்கிறேன்.

இவ்வாறு சுனிதா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், பத்ரா தம்பதியின் மகன் ஆயுஷ்மான் மனநோயாளியாக ராஞ்சியில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுனிதா உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்கள் கூறுகையில், சுனிதா மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், சரியாக நடக்கவும் பேசவும் அவரால் முடியாது. அவர் குணமடைய சில நாட்கள் ஆகும் என்றனர்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து "சீமாபத்ராவை கைது செய்ய வேண்டும்" என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com