பா.ஜனதா பிரமுகர் அடித்து கொலை

பா.ஜனதா பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
பா.ஜனதா பிரமுகர் அடித்து கொலை
Published on

மங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). பா.ஜனதா பிரமுகர். இவர் அந்தப்பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, பிரவீன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், பிரவீனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் உருட்டுக்கட்டையால் பிரவீனை சரமாரியாக தாக்கினார்கள். இதில் பலத்த காயமடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெல்லாரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்தப்பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பெல்லாரே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com