ஜம்மு காஷ்மீர்: பாஜக பிரமுகரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிருஷ்டவசமாக பாஜக பிரமுகர் உயிர் தப்பினார். #Militantattack
ஜம்மு காஷ்மீர்: பாஜக பிரமுகரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள், உள்ளூர் பாஜக பிரமுகரான அன்வர் கான் என்பவரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அதிருஷ்டவசமாக அன்வர் கான் காயமின்றி உயிர் தப்பினார்.

ஆனால், அவருக்கு தனிப்பட்ட பாதுகாவலர் பிலால் அகமது என்ற கான்ஸ்டபிள் காயம் அடைந்தார். காயம் அடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாஜக பிரமுகரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com