மராட்டிய ஆளுநருடன் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு

முன்னாள் எம்.பியும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமி மராட்டிய ஆளுநரை சந்தித்துப் பேசினார்.
மராட்டிய ஆளுநருடன் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு
Published on

மும்பை,

முன்னாள் எம்.பியும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமி மராட்டிய ஆளுநரை சந்தித்துப் பேசினார். மும்பையில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் ஆளுநர் கோஷ்யாரி, சத்ரபதி வீரசிவாஜியை இழிவுபடுத்தி விட்டதாக மகா விகாஸ் அகாடி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று நேற்று பிரம்மாண்ட பேரணியும் சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் நடத்தின. இந்த நிலையில், தான் மராட்டிய ஆளுநரை சுப்ரமணியன் சுவாமி சந்தித்து பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com