மேகாலயா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை வராது - மாநில பாஜக தலைவர்

மேகாலயா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை வராது என்று மாநில பாஜக தலைவர் ஒருவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேகாலயா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை வராது - மாநில பாஜக தலைவர்
Published on

துரா

கேரோ மலைப்பகுதி மாநிலத்தின் தன்னாட்சிப் பகுதிகளில் ஒன்றாகும். துரா மாவட்டத்தின் தலைவரான பெர்னார்ட் மராக் என்பவர் கூறுகையில், மாநிலத்தின் பல பாஜக தலைவர்கள் மாட்டிறைச்சி உண்பவர்களே. மலைப்பகுதிகளில் அமலில் இருக்கும் அரசியலமைப்பு பிரிவுகள், அதன் வரலாற்று பின்னணி ஆகியவற்றை மாநில பாஜக தலைவர்கள் அறிவார்கள். எனவே மாட்டிறைச்சி தடை என்பதெல்லாம் திணிக்கப்படாது என்றார்.

பாஜக அடுத்தாண்டு மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் மாட்டிறைச்சி விற்பனையை ஒழுங்குபடுத்தும் என்றார். வெட்டுக்கூடங்கள், விலை ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி மக்கள் எளிதாக மாட்டிறைச்சி உண்பதற்கு வழி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். கேரோ மலைப்பகுதியில் மாட்டிறைச்சி அதிக விலையுள்ளது. அனைவராலும் அதை வாங்கி உண்ண முடியாது. விலையை ஒரே மாதிரியாக வைத்திருக்க அரசு முயலவில்லை. தவிர சுத்தம் என்பதும் கவலைக்குரியது. முறையான சான்றிதழ்களை வெட்டுக்கூடங்கள் பெற்றிருப்பதில்லை. இரசாயனங்களும் கலக்கப்படுகின்றன.

மூன்று மலைப்பிரதேசங்களான கேரோ, காசி மற்றும் ஜெயிண்டியா ஆகியவை அரசியல் சட்டப்படி தன்னாட்சிப் பெற்றவையாகும். தங்கள் பிரதேசத்தில் எதை தடை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை அவை தீர்மானிக்கும். இப்பிரதேசங்கள் மற்ற பிரதேசங்கள் போல் பொதுவானவை கிடையாது. அவற்றை மத்திய அரசு தன் கட்டளைகளால் கட்டுப்படுத்த முடியாது என்று விளக்கினார் பெர்னார்ட் மராக்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com