பாரதீய ஜனதா எம்.பியின் பிரியங்கா குறித்த ஆபாச பேச்சால் சர்ச்சை

பிரியங்காவை விட அழகான நட்சத்திர பேச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர் என பாரதீய ஜனதா எம்.பி., விநாயக் கட்டியர் கூறி உள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பாரதீய ஜனதா எம்.பியின் பிரியங்கா குறித்த ஆபாச பேச்சால் சர்ச்சை
Published on

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேச காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பிரியங்காவும் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் சென்று பிரியங்கா பிரசாரம் செய்வார். என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் முடங்கிக் கிடந்த பிரியங்கா தற்போது உத்தரபிரதேசம் முழுக்க சூறாவளி பிரசாரம் செய்ய முன் வந்திருப்பதால் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரியங்காவை விட அழகான நட்சத்திர பேச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர் என பாரதீய ஜனதா எம்.பி., விநாயக் கட்டியர் கூறி உள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ராஜ்யசபா எம்.பி.,யும் ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவருமான சரத் யாதவ், பாட்னாவில் கூட்டம் ஒன்றில் பேசிய போது, மீடியாக்களில் தோன்றும் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், பாரதீய ஜனதா எம்.பி., விநாயக் கட்டியர் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா பற்றி கூறி உள்ள கருத்து மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். விநாயக் கட்டியர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உள்ளனர்.


Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com