இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம்; பாஜக பிரமுகர் உள்பட 6 பேர் கைது

'ராம், ராம்' என முழக்கம் எழுப்புபவர்கள் இஸ்லாமியர்களை கொலை செய்து விடுவோம் எனக் கூறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.
இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம்; பாஜக பிரமுகர் உள்பட 6 பேர் கைது
Published on

புதுடெல்லி,

டெல்லி ஜந்தர் மந்தரில் வன்முறையை தூண்டும் வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதற்காக பாஜக பிரமுகர் அஸ்வினி உபாத்யாய் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 'ராம், ராம்' என முழக்கம் எழுப்புபவர்கள் இஸ்லாமியர்களை கொலை செய்து விடுவோம் எனக்கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

போராட்டத்தை ஏற்பாடு செய்த பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாய் உள்பட குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரிடம் நேற்று இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அதுபோன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என உபாத்யாய் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com