கர்நாடகாவில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தொடர்பில் இருப்பதாக பாஜக தகவல்

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தொடர்பில் இருப்பதாக பாஜக தகவல்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. இதில் மந்திரிசபையில் இருந்து மந்திரிகள் ரமேஷ் ஜார்கிகோளி, சங்கர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

புதிதாக 8 மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டனர். மந்திரி பதவி பறிக்கப்பட்டதாலும், மந்திரி பதவி கிடைக்காததாலும் மாநிலத்தில் உள்ள ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக பரவலாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி, கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், ஆளும் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியில் உள்ள 15 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ. உமேஷ் கட்டி தெரிவித்துள்ளார். மேலும் உமேஷ் கட்டி கூறும்போது, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தால் வரவேற்பதாகவும், அடுத்த வாரத்தில் பாஜக தலைமையில் புதிய அரசு அமையும் எனவும் தெரிவித்தார்.

ஆனால், உமேஷ் கட்டி எம்.எல்.ஏவின் கூற்றை திட்டவட்டமாக மறுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ தினேஷ் குண்டு ராவ், மக்களை குழப்புவதற்காக கற்பனையான அறிக்கைகளை பாஜகவினர் வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com