கார் விபத்தில் சிக்கிய பாஜக எம்.பி. - அதிர்ச்சி சம்பவம்

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் விபத்தில் சிக்கிய பாஜக எம்.பி. - அதிர்ச்சி சம்பவம்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் தொகுதி பாஜக எம்.பி. ஹேமந்த் சவ்ரா. இவர் இன்று அதிகாலை மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் இருந்து குஜராத்திற்கு சென்றுகொண்டிருந்தார்.

தானேவின் காட்பண்டர் பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது ஹேமந்த் சவ்ராவின் கார் மோதியது. இந்த விபத்தில் எம்.பி.ஹேமந்த் சவ்ராவின் கார் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.

ஹேமந்த் சவ்ரா காயமின்றி தப்பினார். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்த கார் டிரைவர மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com