பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வர வேண்டும்: கொறடா உத்தரவு பிறப்பிப்பு

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 16ம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வர வேண்டும்: கொறடா உத்தரவு பிறப்பிப்பு
Published on

பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் 2029-ம் ஆண்டு முதல் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கவும், மொத்த மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அரசு கடந்த 8-ந்தேதி ஒப்புதல் வழங்கியது.இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற, வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இதற்கிடையே, மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறவே மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு இந்த சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.இதுதொடர்பாக விவாதிக்க, வருகிற 15-ந்தேதி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றன.

மேலும், இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கிடையே, பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரில் பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மசோதாவுக்கு வாக்களிக்க ஏதுவாக அனைவரும் அவைக்கு வர வேண்டும் என்று கோரியுள்ளது. பாராளுமன்ர சிறப்பு கூட்டத்தொடர் 16-18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com