2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் துவக்கம்

2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இன்று தொடங்கியுள்ளது
2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் துவக்கம்
Published on

 ஐதராபாத்,

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறும் நிலையில், தேசிய நிர்வாகிகள் கூட்டத்தைக் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தொடக்கி வைத்துள்ளார்.

ஐதராபாத் பன்னாட்டுக் கூட்ட அரங்கில் பாஜகவின் தேசியச் செயற்குழுக் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இதற்காகப் பேகம்பேட்டை விமான நிலையம் முதல் கூட்டம் நடைபெறும் அரங்கம் வரையும், ஐதராபாத்தின் முதன்மையான சாலைகளிலும் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பெரிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் பாஜக கொடிகள் நாட்டப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

செயற்குழுக் கூட்டத்துக்கு வருவோரை வரவேற்கும் வகையில் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தைக் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தொடக்கி வைத்தார். இதில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

ஐதராபாத் பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள குஷ்பூ, தாண்டியா நடனமாடி மகிழ்ந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com