பா.ஜ.க.விற்கு புதிய தேசிய தலைவர்; பிப்ரவரி மாதம் பதவியேற்க வாய்ப்பு

பா.ஜ.க.விற்கான புதிய தேசிய தலைவர் வரும் பிப்ரவரி மாதம் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க.விற்கு புதிய தேசிய தலைவர்; பிப்ரவரி மாதம் பதவியேற்க வாய்ப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, பா.ஜ.க.வின் தேசிய தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவியேற்றார். கட்சி விதிகளின்படி தேசிய தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்றாலும், 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து, மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்த நிலையில், பா.ஜ.க.விற்கான புதிய தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கட்சியின் மாநில அணிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் நிர்வாக தேர்தல்கள் அடுத்த மாதம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மூத்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், பா.ஜ.க. மாநில தலைவர்களில் சுமார் 60 சதவீதம் பேரின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாகவும், புதிய மாநில தலைவர்களை நியமிக்கும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்றும் கூறினார். மேலும், வரும் பிப்ரவரி மாதம் பா.ஜ.க.விற்கான புதிய தேசிய தலைவர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர், கட்சியின் புதிய தேசிய தலைவர் மந்திரி சபையில் உள்ளவராகவோ, அல்லது கட்சியின் மூத்த நிர்வாகியாகவோ இருக்கலாம் என்றும், இதுவரை எந்த முடிவும் உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com