

ஜாம்ஷெட்பூர்,
ஜார்கண்ட் மாநிலம் குந்தி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அர்ஜுன் முண்டாவின் தேர்தல் அலுவலகம், கார்சவான் நகரில் உள்ளது. அந்த அலுவலகத்துக்குள் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் 4 பேர் புகுந்தனர். அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 டிரைவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
பின்னர், வெடிகுண்டை பொருத்தி, அதை வெடிக்கச் செய்தனர். இதில், அலுவலகத்தின் பின்பக்க சுவர் சேதமடைந்தது. தகவல் அறிந்து போலீசார் வந்தபோது, 100 மீட்டர் ஒயர்கள், ஒரு டெட்டனேட்டர், மாவோயிஸ்டு துண்டு பிரசுரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.