

அப்போது பேசிய டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா, பாகிஸ்தானில் நடைபெற்றிருக்கும் பேரரசர் ரஞ்சித் சிங் சிலை உடைப்பு சம்பவம், அவர்களின் தலீபான் மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது. அதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.
பாகிஸ்தானின் இந்த மனோபாவம் தொடர்ந்தால், அந்த நாட்டின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர், விரைவில் இந்தியாவின் அங்கமாகும். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கத்தான், மோடி அரசு துல்லியத் தாக்குதலை நடத்தியது என்ற கூறினார். பா.ஜ.க. போராட்டத்தையொட்டி டெல்லி பாகிஸ்தான் தூதரகம் முன்பு நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.