

புதுச்சேரி,
30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
1. மண்ணடிப்பேட்டை - அமைச்சர் நமச்சிவாயம்
2. ஊசுடு - தீப்பைந்தன்
3. காலாப்பட்டு - கல்யாணசுந்தரம்
4. ராஜ் பவன் - ராமலிங்கம்
5. முதலியார்பேட்டை - ஜான்குமார்
6. மணவெளி - ஏம்பலம் ஆர்.செல்வம்
7. திருநள்ளார் - ராஜசேகரன்
8. நிரவி-திருப்பட்டினம் - மீனாட்சிசுந்தரம்
9. மாகே - தினேஷன்