அசாம் சட்டசபை தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

அசாம் சட்டசபை தேர்தலையொட்டி அம்மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
அசாம் சட்டசபை தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
Published on

கவுகாத்தி,

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், முன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அசாம் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் 10 தீர்மானங்கள் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளது.

அசாம் தேர்தலில் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்,

* வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வீணாகும் நீரை பாதுகாக்கவும் பிரம்மபுத்திரா நதியில் கூடுதல் நீர்த்தேக்கங்கள் கட்டப்படும்

* நீண்டகால அசாமின் வளர்ச்சிக்கு பாஜக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்

* அனைத்து பள்ளி மாணவ\மாணவிகளுக்கு இலவச கல்வி மற்றும் 8-ம் வகுப்பில் இருந்து பள்ளி மாணவ\மாணவிகளுக்கு சைக்கில் வழங்கப்படும்

* அசாமை பாதுகாப்பதற்காக சரிசெய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும். உண்மையான இந்திய குடிமக்களை நாங்கள் பாதுகாப்போம். அசாம் குடிமக்கள்

பாதுகாப்பாக இருக்க ஊடுருவல்கார்களை கண்டறிப்படுவார்கள்.

* 5 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்கள் தொழில்தொடங்க உதவிகள் செய்யப்படும்

* தன்னிறைவு அசாம் என்ற நிலை ஏற்பட அசாம் ஆத்மநிர்பன் திட்டம் கொண்டுவரப்படும்

* தொழில்முறை பள்ளிகள் உருவாக்கப்படும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com