கேரளம்: 2-ம் கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

2-ம் கட்டமாக 39 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளம்: 2-ம் கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
Published on

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபைக்கு வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பாஜக சார்பில் முதல்கட்டமாக 47 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சித் தலைமை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியிட்டிருந்தது.

இரண்டாம் கட்ட வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தில்லியில் நேற்று நடைபெற்றது. பாஜக தலைவர் நிதின் நவீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், காசர்கோடு தொகுதியில் அஸ்வின், மலப்புரம் தொகுதியில் அஸ்வதி குமார் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 2-ம் கட்டமாக 39 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் மத்திய முன்னாள் மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், முரளிதரன், மாநில முன்னாள் தலைவர் கே. சுரேந்தர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com