பா.ஜனதா, மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ்தான் வகுப்புவாத கட்சி - கிரண் ரிஜிஜு பேட்டி


பா.ஜனதா, மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ்தான் வகுப்புவாத கட்சி - கிரண் ரிஜிஜு பேட்டி
x
தினத்தந்தி 5 July 2025 5:30 AM IST (Updated: 5 July 2025 5:30 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசும், சில எதிர்க்கட்சிகளும் சிறுபான்மையினர் மனதில் அச்சத்தை விதைக்க பார்க்கின்றன என்று கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பீகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, சிறுபான்ைமயினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபற்றி மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவில் 6 சிறுபான்மையின சமுதாயங்கள் உள்ளன. காங்கிரசும், சில எதிர்க்கட்சிகளும் சிறுபான்மையினர் மனதில் அச்சத்தை விதைக்க பார்க்கின்றன. அவர்களை தவறாக வழிநடத்தக்கூடாது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சிறுபான்மையினருக்கு அதிக சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படுகின்றனர்.

அனைத்து மதங்களையும் சமமாக நடத்தும் பா.ஜனதாதான் மதச்சார்பற்ற கட்சி. சிறுபான்மையினரை தனது அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தும் காங்கிரஸ் கட்சி, வகுப்புவாத கட்சி. முஸ்லிம்களை வாக்கு வங்கியாக கருதும் காங்கிரஸ் கட்சி, அவர்களை தொடர்ந்து ஏழைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story