

கான்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2019 பாராளுமன்றத் தேர்தலில் வளர்ச்சி மற்றும் நல்லாட்சி பாரதீய ஜனதாவின் இரு முக்கிய விஷயமாக இருக்கும், என்றார். கைரானா பாராளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பற்றியை கேள்விக்கு ராஜ்நாத் சிங் பதிலளிக்கையில், இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றிப்பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார். கைரானா பாராளுமன்றத் தொகுதியில் மே மாதம் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பாரதீய ஜனதா எம்.பி. ஹகும் சிங் மரணம் அடைந்ததை அடுத்து கைரானா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
பிரதமர் மோடியின் இருநாள் சீனப்பயணம் தொடர்பாக அவர் பேசுகையில், சீனா மட்டுமின்றி அனைத்து அண்டைய நாடுகளுடனும் இந்தியா நல்ல உறவையே விரும்புகிறது, என்றார்.