பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் இன்று கர்நாடகம் வருகை

பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் இன்று கர்நாடகம் வருகை தருகின்றனர்.
பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் இன்று கர்நாடகம் வருகை
Published on

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அரசின் 2 ஆண்டுகள் சாதனை விழா மேடையிலேயே கண்ணீர் சிந்தியபடி இதனை அவர் அறிவித்தார். பின்னர் எடியூரப்பா, கவர்னர் கெலாட்டை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இதுகுறித்து எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை அறிய பா.ஜனதா மேலிட பார்வையாளர்களாக மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகம் வருகிறார்கள்.

அவர்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை நடத்தி யாரை அடுத்த முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கலாம் என்பது குறித்து கருத்துகளை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com