பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது: பிரியங்கா காந்தி

வேலை கிடைக்காத வரை வசதிகள் கிடைக்காது என்றும் நாட்டில் வளர்ச்சியும் ஏற்படாது எனவும் பிரியங்கா காந்தி கூறினார்.
பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது: பிரியங்கா காந்தி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் அவரது சகேதரி பிரியங்கா காந்தி இன்று பங்கேற்றார். அப்பேது பிரியங்கா காந்தி பேசியதாவது:

உத்தரப் பிரதேச காவல்துறைக்கு 28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். ஆனால் வினாத்தாள் கசிந்தது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்ததால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. உங்களுக்கு வேலை கிடைக்காத வரை வசதிகள் கிடைக்காது. வினாத்தாள் கசிவு நிறுத்தப்படவில்லை. நாட்டில் வளர்ச்சியும் ஏற்படாது. உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் வாக்களிக்கும் போதுதான் மாற்றம் ஏற்படும்" என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com