பா.ஜ.க. ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது ; பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

வேலையில்லா திண்டாட்டம் குறைய இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என பிரியங்கா காந்தி கூறினார்.
பா.ஜ.க. ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது ; பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
Published on

அகமதாபாத்,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று குஜராத் மாநிலம் தரம்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,

பா.ஜனதா தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், அரசியலமைப்பை மாற்றுவோம் என கூறி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார். இது அவர்களுடைய யுக்தி.அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதை முதலில் மறுப்பார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதை அவர்கள் அமல்படுத்துவார்கள். சாமானிய மக்களைப் பலவீனப்படுத்தவும், நமது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கவும் அரசியலப்பை மாற்ற நினைக்கிறார்கள். பா.ஜ.க. ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது . நாட்டில் விலைவாசி கட்டுக்குள் வரவும், வேலையில்லா  திண்டாட்டம் குறையவும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். எனக் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com