2029-மக்களவை தேர்தலில் பாஜக தோல்வி அடையும்: அபிஜீத் தீப்கே கணிப்பு

2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியை சந்தித்து ஆட்சியை இழக்கும் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
அபிஜீத் தீப்கே
அபிஜீத் தீப்கே
Published on: 

கொச்சி:

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கண்டித்தும் கேரள மாநிலம் கொச்சியில் நேற்று போராட்டம் நடைபெற்றது.காக்ரோச் ஜனதா கட்சியின் 'ஜந்தர் மந்தர் அட் கொச்சி' என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அபிஜீத் தீப்கே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2029-ம் ஆண்டுக்கு தயாராக இருங்கள். பிரதமர் மோடி நிச்சயமாக ஆட்சியில் இருந்து வெளியேறுவார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆனால், இந்த மாற்றம் தேர்தல் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும்.

நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறை உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.ஞானேஷ் குமார் பதவியில் இருந்து விலகினால், பிரதமர் மோடியும் ஆட்சியில் இருந்து வெளியேறுவார்.

தேர்தல் ஆணையரை பாதுகாப்பதற்காக நாட்டின் இளைஞர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் என்ன சாப்பிட வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைக்கூட கட்டுப்படுத்த முயற்சி நடக்கிறது.தேசியக் கொடியை ஏந்தியதற்காக டெல்லியில் நான் கைது செய்யப்பட்டேன். என்னை எங்கு கைது செய்தாலும் மீண்டும் வந்து தேசியக் கொடியை ஏந்தி போராடுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.

X