வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்: மந்திரி ஈசுவரப்பா

வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்: மந்திரி ஈசுவரப்பா
Published on

மந்திரி ஈசுவரப்பா பேட்டி

சிவமொக்கா டவுன் குண்டப்பா ஷெட் பகுதியில் உள்ள கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா வீட்டில் கோ பூஜை நடந்தது. இதையடுத்து மந்திரி ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைப்பை மக்கள் வரவேற்று மகிழ்ச்சியாக உள்ளனர். இதனை பொறுத்து கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஹனகல் சட்டசபை தாகுதி இடைதோதலில் பா.ஜனதா தோல்வி என்ற ஒரு புல்லை பிடித்துக் கொண்டு விமர்சனம் செய்து வருகிறார்.

அமோக வெற்றி பெறும்

சிந்தகியில் பா.ஜனதா 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதைபற்றி ஏன் பேசுவது கிடையாது. வரும் 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 இடங்களில் அமோக வெற்றி பெறும் என்று சவால் விடுக்கிறேன். மேலும் காங்கிரசை முதலும், வட்டியுடன் சேர்த்து வென்று காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com