கர்நாடக சட்டமன்ற தேர்தல்: பாஜக முன்னிலை, தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக முன்னிலை பெற்றுள்ளதால் அக்கட்சிதொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #KarnatakaElectionResults2018
கர்நாடக சட்டமன்ற தேர்தல்: பாஜக முன்னிலை, தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்குகள் எண்ணத்துவங்கியதும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருந்தது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அண்மையில் கிடைத்துள்ள தகவலின் படி, முன்னணி நிலவரம் தெரிய வந்த 222 தொகுதிகளில் 111 இடங்களில் பாரதீய ஜனதா கட்சியும், 61 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

கர்நாடக தேர்தல் முடிவுகளின் படி பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதால், பாரதீய ஜனதா கட்சியினர், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com