பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது; மக்களின் வருமானம்?: ராகுல் காந்தி கேள்வி

பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது. ஆனால் உங்களின் வருமானம்? என ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது; மக்களின் வருமானம்?: ராகுல் காந்தி கேள்வி
Published on

புதுடெல்லி,

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் மக்களுடைய வருமானம் உயரவில்லையே என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் கொள்கை மற்றும் திட்டங்களை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவ்வப்போது விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில், ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- 2019-20 தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் 50 சதவீகிதம் உயர்ந்துள்ளதுடன், மொத்தம் ரூ.3,623,28 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், கட்சியின் வருமானம் உயர்ந்தாலும், மக்களின் வருமானம் உயரவில்லையே எனப்பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com