

அவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருக்கிறது.இருப்பினும், மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் தாரகேஷ்வர் தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் நியமன எம்.பி. பதவியை நேற்று ராஜினாமா
செய்தார். புதன்கிழமையில் (இன்று) இருந்து தனது ராஜினாமா அமலுக்கு வருவதாக கருதுமாறு அவர் சபைத்தலைவரை கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து கேட்டபோது, மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்வேன் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். சில நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்வேன் என்று ஸ்வபன் தாஸ்குப்தா கூறினார்.
ஒரு நியமன எம்.பி., பதவி ஏற்ற 6 மாதத்துக்கு பிறகு ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணை கூறுகிறது. இதை சுட்டிக்காட்டி, ஸ்வபன் தாஸ்குப்தா தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா கோரிக்கை விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து, தாஸ்குப்தா பதவி விலகி உள்ளார்.