நிதி முறைகேடு புகார்: பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவிற்கு சிக்கல்

எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
நிதி முறைகேடு புகார்: பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவிற்கு சிக்கல்
Published on

பெங்களூரு,

கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த கடந்த 2020-ஆம் ஆண்டு, கர்நாடகாவில் முதல் மந்திரியாக எடியூரப்பா பதவி வகித்தார். அப்போது, கொரோனா உபகரணங்களை கொள்முதல் செய்தததில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும், உள்ளூரில் விற்கப்படும் தொகையை விட கூடுதல் தொகை கொடுத்து மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. சீனாவில் இருந்து வாங்கப்பட்ட கொரோனா உபகரணங்களில் முறைகேடு நடைபெற்றது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆகும்.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி டி குன்கா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 2023-ல் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் கொரோனா உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதனடிப்படையில், முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமலு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக தன் மீது காங்கிரஸ் அரசு குற்றம் சுமத்துகிறது என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com