பல் வேறு நிறுவனங்கள் 13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ. 4574 கோடி கறுப்பு பணம் டெபாசிட் - மத்திய அரசு தகவல்

பல் வேறு நிறுவனங்கள் 13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ. 4574 கோடி கறுப்பு பணத்தை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல் வேறு நிறுவனங்கள் 13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ. 4574 கோடி கறுப்பு பணம் டெபாசிட் - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி

பிரதமர் மோடி கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதற்கு பதிலாக புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மக்கள் தங்களிடம் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிவந்தனர். இதற்கிடையே 2000, 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு வரதொடங்கின.

அந்த கால கட்டங்களில் பல் வேறு நிறுவனங்கள் தங்களிடம் இருந்த கறுப்பு பணங்களை வங்கிகள் மூலம் மாற்றி உள்ளது.

13 வங்கிகள் ரூபாய் நோட்டு தடைக்கு பிந்தைய பரிவர்த்தனை பற்றிய தகவலை 5,800 சந்தேகத்திற்குரிய நிறுவனங்களின் வழங்கியுள்ளன என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனங்கள் 13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ. 4574 கோடி கறுப்பு பணத்தை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக, இந்த கணக்குகளில் இருந்து 4,552 கோடி ரூபாய் திரும்பப் பெறபட்டு உள்ளது.இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளின் செயல்பாடு பின்னர் தடை செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் இந்த நிறுவனங்களில் சிலவற்றில் 100 க்கும் அதிகமான கணக்குகள் அவற்றின் பெயர்களைக் கொண்டுள்ளன என்று தெரியவந்துள்ளது. இதில் ஒரு நிறுவனத்திற்கு 2,134 கணக்குகள் உள்ளன. பெரும்பாலானவர்கள் 300 மற்றும் 900 கணக்குகளுக்கு இடையே உள்ளனர்.

வங்கிகள் வழங்கிய தகவல்படி, இந்த நிறுவனங்களில் கணக்குகளில் நவம்பர் 8, 2016 அன்று 22.05 கோடி ரூபாய் இருப்பு கொண்டதாக இருந்தது.எனினும் நவம்பர்9, 2016 ல் இந்த நிறுவனங்கள் ரூ.4573.87 கோடி டெபாசிட் செய்து உள்ளன. பின்னர் அந்த கணக்குகலில் இருந்து ரூ.4552 கோடி திரும்ப எடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com