பா.ஜ.க. அரசின் பணிகளால் பிளேர் பெரிதும் ஈர்க்கப்பட்டார்: டெல்லி மந்திரி பெருமிதம்


பா.ஜ.க. அரசின் பணிகளால் பிளேர் பெரிதும் ஈர்க்கப்பட்டார்:  டெல்லி மந்திரி பெருமிதம்
x

தெலுங்கு தேச கட்சியின் பொது செயலாளர் லோகேஷ் நரா, ஒடிசா துணை முதல்-மந்திரி கனக் வர்தன் சிங் தியோ ஆகியோரையும் பிளேர் நேரில் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், டெல்லி தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் மந்திரி மன்ஜிந்தர் சிங் சிர்சா ஆகியேரை இன்று நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது பிளேருக்கு, சிலை ஒன்றை ரேகா குப்தா பரிசாக வழங்கினார். இதேபோன்று தெலுங்கு தேச கட்சியின் பொது செயலாளர் லோகேஷ் நரா, ஒடிசா துணை முதல்-மந்திரி கனக் வர்தன் சிங் தியோ ஆகியோரையும் பிளேர் நேரில் சந்தித்து பேசினார்.

பிளேருடனான இந்த சந்திப்பு பற்றி சிர்சா கூறும்போது, டெல்லியில் பா.ஜ.க.வின் புதிய அரசின் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் மீது பெரிய அளவில் அவர் ஆர்வம் காட்டினார்.

100 நாட்களில் பெரிய மாற்றங்களை செய்தது பற்றி அறிந்ததும் ஆழ்ந்து ஈர்க்கப்பட்டார். பொது மக்களின் சுகாதார நலனை வலுப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவற்றால் அவர் அதிகம் ஈர்க்கப்பட்டார் என கூறியுள்ளார்.

1 More update

Next Story