தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா..!

காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா..!
Published on

புதுடெல்லி,

காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரிகள் பலர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தானில் மத்திய மந்திரி பியூஷ் கோயல், மத்தியப் பிரதேசத்தில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லியில் ஹர்திப் சிங் பூரி, கோவாவில் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், இமாச்சல பிரதேசத்தில் அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலையை சுத்தம் செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com