வன்முறையை தூண்ட முயலும் 1178 பேரின் கணக்குகளை நீக்க டுவிட்டர் நிர்வாகத்திடம் மத்திய அரசு வேண்டுகோள்

வன்முறையை தூண்ட முயலும் சுமார் 1200 பேரின் கணக்குகளை முடக்கவோ அல்லது நீக்கவோ வேண்டும் என்று டுவிட்டர் நிர்வாகத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
வன்முறையை தூண்ட முயலும் 1178 பேரின் கணக்குகளை நீக்க டுவிட்டர் நிர்வாகத்திடம் மத்திய அரசு வேண்டுகோள்
Published on

புதுடெல்லி

டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து தவறான தகவல் வெளியிட்டு வன்முறையை தூண்ட முயலும் சுமார் 1200 பேரின் கணக்குகளை முடக்கவோ அல்லது நீக்கவோ வேண்டும் என்று டுவிட்டர் நிர்வாகத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பிய அறிக்கையில், பட்டியலிடப்பட்ட 1178 கணக்குகள் பாகிஸ்தான் அல்லது காலிஸ்தான் ஆதரவாளர்களுடையது என்று பாதுகாப்பு முகமைகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து டுவிட்டர் நிர்வாகம் தரப்பில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், சுதந்திரமான வெளிப்பாட்டின் அடிப்படைக் கொள்கையைப் பாதுகாக்கும் போது உள்ளூர் சட்டங்களை மதிக்கிறோம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, டுவிட்டர் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக வெளிநாட்டை சார்ந்த பிரபலங்கள் செய்த பல டுவீட்களை லைக் செய்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இதைக் கருத்தில் கொண்டு, கணக்குகளைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் உத்தரவை அவர் செயல்படுத்துவாரா என்ற கேள்விகள் எழுகிறது.

டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மீதான நடுநிலைமை குறித்த கேள்விகள் எழுவதால் பிரபலங்களின் சில டுவீட்களை விரும்புவதை அரசாங்கம் எதிர்க்கிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com