கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்து நசுங்கிய பிஎம்டபிள்யூ கார்: ஐகோர்ட்டு வழக்கறிஞர் உயிரிழப்பு

வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, கார் மீது கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்து நசுங்கிய பிஎம்டபிள்யூ கார்: ஐகோர்ட்டு வழக்கறிஞர் உயிரிழப்பு
Published on

அமராவதி,

ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் உள்ள கீசரா சுங்கச்சாவடி அருகே கான்கிரீட் கலவை லாரி ஒன்று பிஎம்டபிள்யூ கார் மீது கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதில் அந்த காரில் இருந்த ஐகோர்ட்டு வழக்கறிஞர் உயிரிழந்தார்.

சுங்கச்சாவடிக்கு அருகிலுள்ள ஒரு வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, கார் மீது கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேக் செயலிழந்ததே வாகனம் கவிழ்வதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தற்போது சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com