கங்கை நதியில் படகு கவிழ்ந்தது: 34 பக்தர்கள் மீட்பு

கங்கை நதியில் படகு கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 34 பக்தர்கள் மீட்கப்பட்டனர்.
கங்கை நதியில் படகு கவிழ்ந்தது: 34 பக்தர்கள் மீட்பு
Published on

வாரணாசி,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியில் ஒரு படகில் ஆந்திராவைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று காலை சென்றனர். ஷீட்லா படித்துறை அருகே அந்த படகு சென்றபோது அதன் அடிப்பகுதியில் துளை ஏற்பட்டு தண்ணீர் கசிந்தது. உடனே அதிலிருந்த பக்தர்களை வேறு ஒரு படகுக்கு மாற்ற முயன்றனர். அப்போது, பழுதான படகு நதியில் கவிழ்ந்தது. பக்தர்கள் 34 பேரும் தண்ணீரில் விழுந்தனர். அவர்களை போலீசாரும், மற்ற படகுக்காரர்களும் பத்திரமாக மீட்டனர்.

குறிப்பிட்ட படகு ஓட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர். மேலும், பழுதான பழைய படகின் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com