

கேடா,
குஜராத்தின் கேடா மாவட்டத்தில் தகோர் பகுதியருகே மஹிசாகர் ஆற்றில் 13 பேருடன் படகு ஒன்று சென்றது. படகில் பயணித்தவர்கள் கொட்லிண்டோரா கிராம மக்கள். அவர்கள் ஆற்றின் மறுகரையில் உள்ள பவகாத் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 16 வயது சிறுவன் பலியானான்.
அவன் ஹர்திக் சவ்டா என அடையாளம் காணப்பட்டு உள்ளான். படகில் இருந்த மற்ற 12 பயணிகளும் ஆற்றில் நீந்தி கரை சேர்ந்தனர். காயமடைந்த அவர்கள் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.