மேற்காசிய மோதலில் பலியான 2 பேரின் உடல் ஓமனில் இருந்து இந்தியாவுக்கு இன்று வருகை

ஓமனில் இருந்து இந்தியாவுக்கு இன்று கொண்டு வரப்பட்ட 2 பேரின் உடல்களை, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள அவர்களுடைய குடும்பத்தினர் பெற்று கொண்டனர்.

மேற்காசிய மோதலில் பலியான 2 பேரின் உடல் ஓமனில் இருந்து இந்தியாவுக்கு இன்று வருகை
Published on

புதுடெல்லி

மேற்காசிய மோதலில் வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றி வந்த இந்தியர்கள் ஓமன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களில் பயணித்தபோது, படுகொலை செய்யப்பட்டனர். இதன்படி, 5 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார். இதில், ஓமனின் சொஹர் நகரில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உடல்களை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகள் நடந்தன.

இதுவரை பலியான 5 பேரில் 2 பேரின் உடல் ஓமனில் இருந்து இந்தியாவுக்கு இன்று கொண்டு வரப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மீதமுள்ள 3 பேரின் உடல்களை விரைவாக சொந்த நாட்டுக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வளைகுடா பகுதிக்கான கூடுதல் செயலாளர் அசீம் மகாஜன் இன்று கூறும்போது, இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவையே அதிக முன்னுரிமைக்கான விசயங்களாக தொடர்ந்து இருக்கும் என்றார்.

ஓமனில் இருந்து இந்தியாவுக்கு இன்று கொண்டு வரப்பட்ட 2 பேரின் உடல்களை, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள அவர்களுடைய குடும்பத்தினர் பெற்று கொண்டனர். அவர்களுடைய குடும்பத்தினருக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என கூறினார். இந்திய நாட்டினரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதில், யாருக்கும் தீவிர காயம் ஏற்படவில்லை என தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

நாங்கள் ஓமன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள நம் தூதரக அதிகாரிகள், தொடர்புடைய உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். காணாமல் போன இந்தியர் ஒருவர் மற்றும் மீதமுள்ள 3 இந்தியர்களின் உடல்களை விரைவாக கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com