சரயு நதியில் விடப்பட்ட அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல்!

சரயு நதியில் அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல் ஜலசமாதி செய்யப்பட்டது.
சரயு நதியில் விடப்பட்ட அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல்!
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா கோவிலின் தலைமை அாச்சகா மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டது.

85 வயதான அவருக்கு இம்மாத தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டு, லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவன (எஸ்ஜிபிஜிஐ) மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டா.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவா நேற்று முன்தினம் (பிப்.12) காலமானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அயோத்தியில் உள்ள இல்லத்தில் மகந்த் சத்யேந்திர தாஸின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், நேற்று சரயு நதியில் விடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நதியின் ஆழமான பகுதிக்கு சத்யேந்திர தாஸின் உடலை கொண்டுசென்ற அர்ச்சகர்கள் ஜலசமாதி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com