

புதுடெல்லி,
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து கவுகாத்தி வழியாக டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளங்குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தின் கழிவறையில் கிடந்த குழந்தையின் உடலைக்கண்ட விமான ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையின் வாயில், கழிவறையில் பயன்படுத்தப்படும் பேப்பர் திணிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விமான நிலைய பாதுகாவலர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் தாயார் மைனர் பெண்ணாக இருக்க கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.