டெல்லி விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டெடுக்கப்பட்டதால் பீதி

டெல்லி விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டெடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டெடுக்கப்பட்டதால் பீதி
Published on

புதுடெல்லி,

டெல்லி விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் சந்தேகத்திற்கிடமான மர்ம பொருள் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. எனவே, அதில் வெடிபொருட்கள் இருக்க கூடும் என்ற அச்சத்தில் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மர்ம பொருளை கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில், வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

மாருதி கம்பெனியின் உதிரி பாகங்கள் அந்த பையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சரக்கு முனையத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று காலை 9 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு விமானசேவைகள் தொடரந்தன. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com