நாடாளுமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் அது வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஒன்பது பள்ளிகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இமெயில் மூலம் வந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தை தகர்ப்போம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து டெல்லி காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் சம்பவ இடங்களில் குவிக்கப்பட்டனர். நிபுணர்கள் நடத்திய அதிரடி சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் அது வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதுமே பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், மருத்துவமனைக்ளுக்கும், உயர்நீதிமன்றங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதாக அவ்வப்போது நடைபெறும் சூழலில் தற்போது நாடாளுமன்றத்திற்கே மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com