கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்


கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அலுவலகம் மற்றும் அவரது வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை பிரிவினரை அனுப்பினர்.

மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் முழுமையான ஆய்வு நடந்து வருகிறது. இருப்பினும், இதுவரை இரு இடங்களிலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பிரதமர் மோடி மே 2ம் தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தற்போது விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story