கேரளா தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக நிபுன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

கேரளாவின் தலைமை செயலகம் அம்மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ளது. இந்த நிலையில், மாநில தலைமை செயலக அலுவகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், மாநில தலைமை செயலக அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இதனையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தலைமை செயலக அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக நிபுன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தலைமை செயலக வளாகத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com