கர்நாடக முதல்-மந்திரி வீடு, சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல்; வாலிபர் கைது

போலீசாரின் விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறார் என கூறப்படுகிறது.

கர்நாடக முதல்-மந்திரி வீடு, சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல்; வாலிபர் கைது
Published on: 

பெங்களூரு

கர்நாடக முதல்-மந்திரி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வீட்டுக்கும் மற்றும் கர்நாடக சட்டசபைக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து, போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்க செய்யும் படை உள்ளிட்ட பல்வேறு குழுவினர் முதல்-மந்திரி வீடு, கர்நாடக சட்டசபை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் எந்தவித வெடிபொருட்களும் சிக்கவில்லை.

அது வெறும் புரளி என தெரிய வந்தது. இதுகுறித்து சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வாலிபர் கைது

இந்நிலையில், பெங்களூரு மல்லேசுவரத்தில் ஆட்டோ முன்பதிவு செய்த கார்த்திக் (வயது 20) என்ற வாலிபர் இந்த மிரட்டலை விடுத்தது தெரிய வந்துள்ளது. அவரை பாலாஜி நகர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறார் என கூறப்படுகிறது. பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வரும் இவர், இதற்கு முன்பும் பல போலி மிரட்டல் அழைப்புகளை விடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளை கவனித்து கொள்ளும் பணியாளராக வேலை பார்த்து வந்த அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X