மகா கும்பமேளாவில் பணியாற்றிய போலீசாருக்கு போனஸ், 7 நாள் விடுப்பு - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு


மகா கும்பமேளாவில் பணியாற்றிய போலீசாருக்கு போனஸ், 7 நாள் விடுப்பு - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
x

மகா கும்பமேளாவில் பணியாற்றிய போலீசாருக்கு போனஸ் மற்றும் 7 நாள் விடுப்பு வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

பிரயாக்ராஜ்,

பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த கும்பமேளா நிறைவடைந்ததை தொடர்ந்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரயாக்ராஜ் சென்றார். அங்குள்ள கங்கா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மகா கும்பமேளாவில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த பிரமாண்ட விழாவை சிறப்பாக நடத்துவதற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 75 ஆயிரம் போலீசாரின் பணி மிகவும் மகத்தானது. அவர்களுக்கு அரசு ரூ.10 ஆயிரம் சிறப்பு போனஸ் மற்றும் 'மகா கும்ப சேவா பதக்கம்' மற்றும் 7 நாள் விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

1 More update

Next Story