கா‌‌ஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தற்கொலை

கா‌‌ஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
கா‌‌ஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தற்கொலை
Published on

ஜம்மு,

காஷ்மீரில் உள்ள ஜம்முவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங்.

இமாசலபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜஸ்வந்த் சிங், அங்குள்ள ரெயில்வே தலைமை அலுவலக கட்டிடத்தில் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.

விசாரணையில் ஜஸ்வந்த் சிங், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com