

புதுடெல்லி,
எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது அனைத்து வீரர்களும் மரியாதைக்குரிய பிரதமர் மோடி நிகழ்ச்சி என்று கூற வேண்டும் என்பது விதி.
அந்தவகையில் கடந்த மாதம் 21ந் தேதி நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது சஞ்சீவ் குமார் என்ற வீரர் மட்டும் மரியாதைக்குரிய பிரதமர் என்ற வார்த்தையை விட்டு விட்டு, மோடி நிகழ்ச்சி என்று கூறியுள்ளார். பிரதமரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சஞ்சீவ் குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மேற்கொண்டார். அதன்படி வீரர் சஞ்சீவ் குமாருக்கு தண்டனையாக ஒரு வாரம் சம்பளம் குறைக்கப்பட்டது.
இது பற்றி அறிந்த பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார். உடனடியாக அந்த வீரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து சஞ்சீவ் குமாருக்கு அளிக்கப்பட்ட சம்பளம் குறைப்பு தண்டனை ரத்து செய்யப்பட்டது.