சர்ஜிக்கல் தாக்குதலால் எந்த பயனும் கிடைக்கவில்லை: மெகபூபா முப்தி சாடல்

சர்ஜிக்கல் தாக்குதலால் எந்த பயனும் கிடைக்கவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
சர்ஜிக்கல் தாக்குதலால் எந்த பயனும் கிடைக்கவில்லை: மெகபூபா முப்தி சாடல்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த போது, பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி கூறும் போது, இந்த கொடூர தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்க வார்த்தைகள் போதாது. எல்லையில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவங்களும், துல்லியத் தாக்குதலாலும் ஒரு பயனும் இல்லை என்பதை தாக்குதல் காட்டுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கமும், இதர அரசியல் கட்சிகளும், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட கண்டிப்பாக ஒருங்கிணைந்து தீர்வை கண்டறிய வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com